சென்னை மாதவரம் கன்னியப்பன் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(68). லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். இவரது மனைவி சாந்தி(60), மகள் பத்மபிரியா(34), மருமகன் மென்பொருள் பொறியாளர் பால்(42), பேரன் ஆர்யா(12), பேத்தி மிருதுளா(8). இவர்கள், அனைவரும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் நேற்று வந்தனர். காரை, பால் ஓட்டி வந்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பால், பத்மபிரியா, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சதீஷ்குமார், ஆர்யா, மிருதுளா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும், கார் மீது மோதிய அரசுப் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் காரில் வந்த சதீஷ்குமார் உட்பட 3 பேரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதேபோல், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துஅதிலிருந்த பயணிகளையும் மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது இதையடுத்து ‘பொக்லைன்' இயந்திரம் வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், சாலையோரத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்தும் மீட்கப்பட்டது. காரில் இருந்த தங்க நகைகளை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago