தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஏழை காத்தம்மன் வல்லடிக்காரர் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது.
600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளை முட்டியதில் 10-க்கும்மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதில் சின்னமனூர் ஜக்கம்மாள் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் முருகேசன்(35) என்பவர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago