பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெற்றோர்கள் கருத்துக்கேட்பில் 98 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில், தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதற்காக 6,025 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் திறக்க தயார் நிலையில் உள்ளன.
ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பள்ளிகள் செயல்பட வேண்டும். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் மூலம் 10, 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, பொதுத்தேர்வு குறித்த அட்டவணை அறிவிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago