கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஊதியமின்றித் தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு முன்பணமாக ரூ.50 ஆயிரம் தர தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க பொதுச்செயலாளர் வி.கே.பழனியப்பன் கூறியதாவது: தமிழகத்தில் 5,100 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 15 லட்சம் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியில் உள்ளனர். 75 சதவீத கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இதனால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் தடுமாறி வருகின்றன. தமிழக அரசு மானிதாபிமான அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5,000 என கணக்கிட்டு 10 மாதங்களுக்கு ரூ.50,000 முன்பணமாக கொடுக்க வேண்டும். இதனை 3 ஆண்டு தவணையில் வசூலித்துக் கொள்ளலாம். ஆசிரியர்களை நம்பி தர வேண்டாம். பள்ளி நிர்வாகத்தை நம்பி கொடுக்கலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago