திருவாரூர் மாவட்டம் ஜாம்புவானோடையில் பழங்காலத்தைச் சேர்ந்த 7 உலோக சிலைகள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
முத்துப் பேட்டையை அடுத்து உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது தோட்டத்தில் தென்னை மரக் கன்றுகள் நடும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக குழி தோண்டியபோது, அங்கு சோமாஸ்கந்தர், அம்பிகை, நடராஜர், விநாயகர், சுந்தரர் உட்பட உலோகத்தால் ஆன 7 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து, தகவலறிந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசன் அங்கு சென்று 7 சிலைகளையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த சிலைகளின் தன்மை குறித்தும், இவை எந்த வகை உலோகத்தால் ஆனவை என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், இதுதொடர்பாக தொல்லி யல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago