திமுக கூட்டணி 200 தொகுதிகள் வெல்லும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

By செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நேற்று கூறியது: பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்த நாளன்றே திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழை செம்மொழியாக அறிவித்து, தமிழ் செம்மொழி நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிறுவனத்தை மைசூரில் உள்ள பன்மொழி நிறுவனத்தோடு இணைக்கும் பாஜக அரசின் முடிவை ஏற்கமுடியாது.

பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 100 நாட்களே உள்ளன. தினமும் கடினமாக உழைத்தால் 200 தொகுதிகளை திமுக கூட்டணி எளிதாக கைப்பற்றிவிடலாம் என்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர், “ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற முடிவை வரவேற்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்