திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது;

கிராமசபைக் கூட்டத்தை ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. அதனால்தான், மக்கள் கிராம சபைக்கூட்டத்தை திமுக நடத்துகிறது. இக்கூட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கின்றனர். இன்னும் 4 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

தமிழக அரசு அறிவித்துள்ள மினி கிளினிக் திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டம். இந்ததிட்டத்துக்காக புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப் படவில்லை. ஏற்கெனவே,ஊராட்சிகளில் செயல்பட்டுவந்த ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர்களை வைத்து மினி கிளினிக்கை நடத்துகின்றனர்.

தமிழகத்தில் நூறு நாள்வேலைத்திட்டத்தில் முறையாக வேலை கொடுப்பதில்லை. அப்படி வேலை கிடைத்தவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்குவந்தால் இந்த வேலைத்திட் டத்தை 150 நாளாக உயர்த்துவதோடு, வேலை செய்வோருக்குஅந்த நாளிலேயே சம்பளம்வழங்கும் சூழ்நிலையை உருவாக்குவோம். கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கசெய்வோம். திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் கல்விக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்