சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அதற்கேற்ப பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும், என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மாக்கினாங்கோம்பையில் அரசின் மினி மருத்துவ கிளினிக்கை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிராமப்புற மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுஉள்ளன. படுக்கைகள், ஸ்கேன் வசதியுடன் 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.
நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன. முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் ரூ.5லட்சம் வரை சிகிச்சை பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு சீருடை, பாடப்புத்தகம் என மாணவர்களுக்குத் தேவையான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. அதிக மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில், ஜனவரி மாதத்துக்குள் 7,412 நுண் அறிவியல் ஆய்வகங்கள் தொடங்கப்படும். பேரவைக்குபொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு வந்தவுடன், அதற்குஏற்ப முதல்வர் ஒப்புதலோடு, பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago