ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை கோயிலில இருந்து வழக்கத்தை விட தாமதாமாக நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஷ்வரர் தேரில் எழுந்தருளினர்.
பின்னர் கீழவீதி நிலையில் இருந்து பக்தர்கள் வடம் பிடிக்க 5 தேர்களும் புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதிகள் வழியாக சென்றது. ஒவ்வொரு வீதிகளிலும் மண்டகபடி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் இடத்தில் பருவதராஜ குலத்தினர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சுவாமிகளுக்கு பட்டு சாத்தி படையல் செய்தனர். ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு தேர்கள் நிலைக்கு வந்தன.
இதனை தொடர்ந்து கோயில் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் லட்சார்சணை நடைபெற்றது.
இன்று ஆருத்ரா தரிசனம்
இன்று (டிச.30) அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜ பெருமானுக்கும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மஹாஅபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து காலை 10 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள் பகுதி திருவாபரண அலங்காரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் பகதர்களுக்கு காட்சி அளிப்பார்கள். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா முடிந்து தீர்த்தவாரி நடந்தவுடன் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago