பொங்கல் பரிசுத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக முதல்வர் பழனிசாமி பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் பிரிவு சாலையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை அறிந்து பொங்கலுக்கு ரூ.2,500 சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தேன். இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில், இந்த திட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென சூழ்ச்சி செய்து நேற்றைய தினமே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொய்யான அறிக்கையை வெளியிட்டார். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்குவதாக ஒரு பொய் செய்தியை அவர் பரப்புகிறார். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் முதல்வர் பழனிசாமி வழிபாடு செய்தார். அமைச்சர்கள் பி.தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர், எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago