பயோ மெட்ரிக்குக்கு பதிலாக பழைய முறையிலேயே பொங்கல் பரிசு பெறலாம் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

பயோ மெட்ரிக் முறைக்குப் பதிலாக பழைய முறையிலேயே பொங்கல் பரிசை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் ஆண்டிப்பந்தல் அருகே உள்ள பனங்குடி பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய கடன் உதவியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் திட்டம் பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்தப்படாமல், ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து பழைய நடைமுறையிலேயே வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது. அவ்வப்போது பயோமெட்ரிக் முறையில் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.

அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு எந்த பிரச்சினையும் இல்லாத வகையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வர் வேட்பாளர்

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்