கரூர் பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர்(43). சுற்றுலா வேன் ஓட்டுநர்.இவரது மனைவி சுதா. அங்கன்வாடி ஊழியர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு தனது வேனில் சென்றபாஸ்கர், அலுவலக நுழைவுவாயில் முன் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து இறந்தார். தாந்தோணிமலை போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, வேனில், பாஸ்கர் எழுதி வைத்திருந்த 5 பக்க கடிதம்சிக்கியது. கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது உறவினர்களுக்கு பணம் கொடுத்திருந்தேன். அவர்கள் பணத்தை திரும்பத் தரவில்லை.
ஊரடங்கால் வருமானம் இழந்த நிலையில் எனது வேனை விற்றேன். பின்னர், தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி புதிய வேன் வாங்கினேன். மேலும், இருமகள்களை கல்லூரியில் சேர்க்ககட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஸ்கரின் கடிதத்தில் அவருக்கு ரூ.75 ஆயிரம்பணம் தரவேண்டியதாக குறிப்பிடப்பட்டிருந்த பேருந்து கூண்டுகட்டும் நிறுவன உரிமையாளரான கார்த்தி(31) என்பவரை தாந்தோணிமலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago