மழையால் சேதமடைந்த பயிர் களுக்கு காப்பீட்டுத் தொகை மட்டுமின்றி, அரசு சார்பிலும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்களை நேற்று பார்வையிட்ட அமைச்சர் ஆர்.காமராஜ், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் 1,35,590 விவசாயிகள், தங்களின் 3,96,675 ஏக்கர் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத் தில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 2,22,120 ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன.
சேதமடைந்த பயிர்களுக்குகாப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர தமிழக அரசு சார்பில்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி, பயிர்ச் சேதத்துக்கு அரசின் சார்பாகவும் உரிய நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கனமழையால் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்கள், வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பாதிப்படைந்த பகுதிகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அவற்றுக்கான நிவா ரணம் உரிய காலத்தில் வழங் கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago