திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மாதம் மகா தீபத் திருவிழா, கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விழாவின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 29-ஆம் தேதி மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 10 அடி உயர கொப்பரையில் 1,000 மீட்டர் காடா துணியுடன் 3,500 கிலோ நெய்யில் மகா தீபம் எரிந்தது.
தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த மகாதீபம் நேற்றுடன் முடிவுற்ற நிலையில் அண்ணாமலையில் இருந்து தீப கொப்பரை இன்று (10-ஆம் தேதி) காலை கீழே இறக்கப்படும். கோயில் மண்டபத்தில் வைக்கப்படும் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் மையை ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு சாற்றப்பட்ட பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago