நிலம் உட்பிரிவு செய்துதர லஞ்சம் வருவாய்த் துறை அலுவலர்கள் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர், தனது குடும்ப நிலத்தை உட்பிரிவு செய்து தருமாறு கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அதற்காக, நில அளவையர் முத்து ரூ.10,000, மண்டல துணை வட்டாட்சியர் செல்வ கணபதி ரூ.4,000 மற்றும் கோமாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெரோம் ரூ.1,000 என மொத்தம் ரூ.15,000 லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி புகார் அளித்துள்ளார்.

அவர்கள் அளித்த ஆலோசனையின்பேரில் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ஜெரோமிடம் ரசாயனம் தடவிய ரூ.15,000 ரொக்கத்தை ராஜீவ்காந்தி நேற்று கொடுத்துஉள்ளார். அவரிடம் இருந்து தாங்கள் தொகையை பங்கிட்டு பெற்றுக்கொள்வதாக அங்கிருந்த செல்வகணபதி, முத்து ஆகியோர் ராஜீவ்காந்தியிடம் கூறினர். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் ஜெரோம், செல்வகணபதி, முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்