கொடுமுடியில் 33.44 செ.மீ.மழை பதிவு

By செய்திப்பிரிவு

கொடுமுடியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய33.44 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.நேற்று அதிகாலை வரை 33.44 செ.மீ மழை பதிவானது.

மிக கனமழையால் கொடுமுடி வடக்கு தெரு, நுழைவு பாலம் போன்ற இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம்சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில்மழை நீர் வெள்ளம்போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து மக்களை அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கனமழை தொடர்பாக கொடுமுடி மேற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.லட்சுமணன் கூறும்போது, "கொடுமுடியில் நேற்று முன்தினம் பெய்த மழைபோல் சமீபத்தில் மழை பெய்ததில்லை. புயல் கரையை கடந்த 6 மணி நேரத்துக்கு பின்னரும் மழை பெய்துள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்