பலத்த மழையுடன் மரக்காணம் தப்பியது மின் கம்பங்கள் சேதம்; தரைப்பாலம் மூழ்கியது

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மென்மையாக கரையைக் கடந்த ‘நிவர்’ புயலால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் சில மரங்களும், மின் கம்பங்களும் மட்டுமே சாய்ந்தன.

மரக்காணம் அருகே காணிமேடு, மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு இடையே ஓங்கூர் ஆற்றில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 10-க்கும் மேற்் பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுஉள்ளன. அந்தக் கிராமத்தினர் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் புதுவை, சென்னை, மரக்காணம் போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். பாலம் நீரில் மூழ்கியதால் இங்குள்ளவர்கள் அன்றாட தேவைகளான மளிகை, மருத்துவமனை, புதுவைக்கு வேலைக்கு செல்லுதல், போன்ற அத்தியாவசிய தேவைக்குக் கூட 10 கி.மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டார்.

இந்தப் பெரு மழையால் மரக்காணம் அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிகிறது. மேலும் மரக்காணத்தில் உள்ள உப்பளம் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மரக்காணம் அருகே குரும்பரம் ஏரி நிரம்பி உபரி நீர் மதகு வழியாக வழிகிறது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணிவரை மரக்காணத்தில் 13.5 செ.மீ மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்