கடலூரில் நெற் பயிர், வாழைகள் சேதம்

By செய்திப்பிரிவு

’நிவர்’ புயலால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த நெற் பயிர்கள், வாழை மரங்கள் சேதமடைந்தன.

’நிவர்’ புயலால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கனமழையால் விளை நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. கடலூர், புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 1,618 ஹெக்டேர் நெற் பயிர் பாதிப்பு அடைந்துள்ளது. விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளில் 315 ஹெக்டர் மணிலா பயிர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளன.

கடலூர் எம்புதூர், வழி சோதனைபாளையம், கீழ் குமாரமங்கலம், ராமபுரம் பகுதிகளில் 35 ஹெக்டர் வாழை மரங்கள் சேதமடைந்தன. திட்டக்குடி, மங்களுர் பகுதியில் 8 ஹெக்டேர் மர வள்ளி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

324 மரங்கள் விழுந்தன

மழை வெள்ளத்தால் கடலூர் புதுப்பாளையம், வண்டிப்பாளையம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சிதம்பரம் - கடலூர் சாலையில் சின்னக்குமட்டி, கடலூர் கடற்கரை சாலை, தூக்கணம்பாக்கம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 324 மரங்கள் விழுந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்