நிவர் புயல் கனமழை காரணமாகமேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: நிவர் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர்திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் பெய்யும் கனமழை, அதி கனமழையாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து. மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் விநாடிக்கு 1,000 கனஅடி திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று நண்பகல் முதல் 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

விநாடிக்கு 9,478 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,464 கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் 97.82 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 98.20 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 62.53 டிஎம்சியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்