வங்கியில் 14 கிலோ நகை மாயமான வழக்கு சிபிஐ விசாரணைக்கு புதுக்கோட்டை எஸ்பி பரிந்துரை

புதுக்கோட்டை வங்கியில் 14 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார்.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிளையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.5 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் மாயமானது.

அந்த சமயத்தில், அதே வங்கியில் உதவியாளராகப் பணியாற்றிய மாரிமுத்து காணாமல் போன |நிலையில், மணமேல்குடி பகுதி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினர், கடலோரக் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

எனினும் வங்கியில் இருந்த நகைகளை யார் திருடியது, மாரிமுத்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த எந்த விவரமும் தெரியவரவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்யுமாறு டிஜிபிக்கு, மாவட்ட எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன் பரிந்துரை செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE