‘முதல் நாளில் 250 திரையரங்குகள் மட்டுமே திறப்பு’

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 250 திரையரங்குகள் மட்டுமே திறப்பட்டதாக, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "தமிழகம் முழுவதும் 1,112 திரையரங்குகள் உள்ளன. இதில், சுமார் 250 திரையரங்குகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டன. தயாரிப்பாளர்கள், திரையரங்க அதிபர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. வி.பி.எஃப். கட்டணத்தை திரையரங்க அதிபர்கள் கட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது. திரையரங்குகளை திறக்குமாறு அரசு கூறியுள்ளது. பட அதிபர்கள் எப்போது வெளியிடுகிறார்களோ, அப்போது திரைப்படத்தை திரையிடுவோம். வருகிற படங்களை வைத்து, திரையரங்குகளை திறந்து நடத்த முடிந்தவர்கள் நடத்துங்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில்169 திரையரங்குகளில், 40 திரையரங்குகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டன. அதில் 10-15% ரசிகர்களே வந்தனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்