இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது உரியசான்றிதழ் இணைக்காவிட்டாலும்கூட கலந்தாய்வுக்கு வரும்போது கொண்டுவந்து சமர்ப்பிக்கலாம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்றுஅவர், செய்தியாளர்களிடம் கூறியது: தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலானோர்முகக்கவசம் அணியாமல் கடைவீதிகளுக்கு சென்று வருவது வருத்தம் அளிக்கிறது. பண்டிகை முடியும் வரை நாம்கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். சுயகட்டுப்பாடுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.
பொதுவாக, அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை எப்போதுமே தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் டெங்குவின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது. ஆனால், நிகழாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையோடு சேர்த்து எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக அனைத்து தொற்று நோய்களின் தாக்கமும் குறைந்துள்ளது.
16-ல் தரவரிசைப் பட்டியல்
இளநிலை மருத்துவப் படிப்புக்கு வரும் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை 27,400 பேர் ஆன்லைன் மூலம்விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது உரிய சான்றுகள் இணைக்காவிட்டாலும் கூட கலந்தாய்வுக்கு வரும்போது கொண்டுவந்து சமர்ப்பிக்கலாம் என்று விதியில் தளர்வுஅளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி,திருத்தம் செய்துகொள்ளலாம். வரும் 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு ஓரிரு நாட்களில் கலந்தாய்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago