551 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நியமன ஆணை

By செய்திப்பிரிவு

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள 663 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-ல் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்ற 522 பட்டதாரிகளின் பட்டியல் 2018-ல்வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது.

இந்த பட்டியலை எதிர்த்து தேர்வர்கள் சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், பட்டியல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 561 பெயர்கள் கொண்ட திருத்தப்பட்ட புதிய பட்டியல் கடந்த அக்.28-ல் வெளியானது. தொடர்ந்து, அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நவ.2, 3-ம் தேதிகளில் நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் 551 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில்,முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு, 551 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும்அடையாளமாக, 5 ஆசிரியர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் க.சண்முகம், பள்ளிக்கல்வி செயலர் தீரஜ் குமார், ஆணையர் என்.வெங்கடேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் இல.நிர்மல்ராஜ், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும்உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்