குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு டிஜிபியாக பதவி வகிக்கும் ஜாபர்சேட், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்புத் துறை மற்றும் ரயில்வே துறை டிஜிபியாக பதவி வகிக்கும் சைலேந்திரபாபு, தீயணைப்புத் துறை பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ரயில்வே டிஜிபியாக நீடிக்கிறார். அவர்கூடுதல் பொறுப்பாக உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் நிர்வகிப்பார். அயல்பணியில் இருந்து தமிழகம் திரும்பி காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி துரைகுமார், சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago