திருச்செந்தூரில் நவ. 15-ல்கந்த சஷ்டி விழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் பிரசித்திபெற்ற கந்த சஷ்டி திருவிழாவில், 6-ம் நாளன்று கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, கந்த சஷ்டி விழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருச்செந்தூர் கோயிலில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது: திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா இம்மாதம் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது. நவம்பர் 20-ம் தேதி சூரசம்ஹாரமும், 21-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

கரோனா ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.கந்த சஷ்டி விழாவுக்கு அரசு தரப்பில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். இதுதொடர்பாக, நாளை தனி ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதன்பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எவ்வளவு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்