`கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
வரும் இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை பாஜக துரிதப்படுத்தியுள்ளது. பாஜக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் ஏற்பட்டுஉள்ளது.
தெய்வங்களையும், தெய்வச் சின்னங்களையும் கொச்சைப்படுத்துவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விருப்பமாக இருப்பதாக கருதுகிறேன். ஏற்கெனவே, ரங்கம் கோயிலுக்கு ஸ்டாலின் சென்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட சமயச் சின்னத்தை அழித்து அவமானப்படுத்தி விட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் வழங்கப்பட்ட திருநீரை, ஸ்டாலின் தரையில் கொட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago