சபரிமலை யாத்திரைக்கு கரோனா சான்று கட்டாயம்

By செய்திப்பிரிவு

தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் sabarimalaonline.org என்ற இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். வார நாட்களில் ஒரு நாளுக்கு 1,000 பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் ஒரு நாளுக்கு 2,000 பக்தர்களுக்கும் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

தரிசனத்துக்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை (கரோனா ‘நெகட்டிவ்’) என சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்