தமிழகத்தில் புதிதாக 2,481 பேருக்கு கரோனா முதியவர்கள் உட்பட 31 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 2,481 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,453, பெண்கள் 1,028 என மொத்தம் 2,481 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 29,507 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 1 லட்சத்து 91,104பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 98,820 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1,238 பேர் உட்பட தமிழகம்முழுவதும் 3,940 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 6,422 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 19,504 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 10 பேர், தனியார் மருத்துவமனைகளில் 21 பேர் என நேற்று 31 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 9 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,183 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 203 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 99,519 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 70,297 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்