தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து நவம்பர் 9-ம் தேதி தர்ணா காங். அகில இந்திய செயலர் சஞ்சய் தத் தகவல்

காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி ஆகியன நேற்று நடைபெற்றன.

கையெழுத்து பெறும் இயக்கத்தைத் தொடங்கிவைத்த அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதுடன், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. எனவே, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அனைத்து மாவட்டங்களிலும் நவ.1 முதல் நவ.10 வரை டிராக்டர் பேரணி நடத்தப்படும்.

மத்திய பாஜக அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கும், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசும் தோல்வியடைந்துள்ளன.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நவ.9-ம் தேதி மாநிலம் முழுவதும் தர்ணா நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்