உதகை: முறையாக உணவு வழங்காமல், இருட்டு அறையில் அடைத்து தங்களை சிறை அதிகாரிகள் கொலை செய்ய முயற்சி செய்வதாக கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நீதிபதியிடம் புகார் அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்டநீதிமன்றத்தில் நேற்று நடந்தது. கைதான 10 பேரும் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர், ‘‘கோவை சிறையில் கடந்த 28-ம்தேதி முதல் சிறை அதிகாரிகள் முறையாக உணவு வழங்காமல், இருட்டு அறையில் அடைத்து வைத்து தங்களை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்’’ என்று பொறுப்பு நீதிபதி அருணாசலத்திடம் புகார் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சயான், மனோஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago