நவம்பர் 6-ம் தேதி திருப்பூர், நீலகிரி செல்லும் முதல்ல்வர் பழனிசாமி கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக முதல்வர் பழனிசாமி, மாவட்டங்கள் தோறும் நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில், வரும் 6-ம் தேதிதிருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி செல்கிறார். அங்கு மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago