கேட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள நவ.13 வரை அவகாசம்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர ‘கேட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான இத்தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு 2021 பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப் பிரிவு வாரியாக நடக்க உள்ளன. இத்தேர்வை மும்பை ஐஐடி நடத்த உள்ளது.

இதற்கான இணைய வழியிலான விண்ணப்ப பதிவு கடந்த செப்.11 முதல் அக்.14-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள நவ.13-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான நகரங்களை கட்டணமின்றி மாற்றிக் கொள்ளலாம். பாடப் பிரிவு, பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மும்பை ஐஐடி அறிவித்துள்ளது.

ஹால் டிக்கெட் ஜனவரி 8-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை gate.iitb.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்