இபிஎஃப் ‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கல்

By செய்திப்பிரிவு

பிரயாஸ் திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற நாளிலேயே, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்) அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டன

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் ‘பிரயாஸ்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இபிஎஃப் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் உள்ள ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட், குவேஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வுபெற்ற நாளில் ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டன.

இபிஎஃப் அலுவலக, சென்னை வடக்கு மண்டல முதல்நிலை ஆணையர் சிதுராஜ் மோதி இந்த ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஓய்வூதிய அலுவலக இரண்டாம் நிலை ஆணையர் டாக்டர் சுதிர் ஜெய்ஸ்வால், உதவி ஆணையர் பி.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்