தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு கரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி ஆலோசனையின் பேரில், அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு வகித்து வந்தவேளாண் துறை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் அமைச்சர் கே.பி.அன்பழகன் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் முதல்வர் பழனிசாமியையும் சேர்த்து 31 பேர் உள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு இறந்துவிட்டதால், அமைச்சர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை234. இதில் 3 இடங்கள் காலியாக உள்ளன. சட்டப் பேரவைத் தலைவர் தனபாலையும் சேர்த்து அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 125.
அமைச்சர் துரைக்கண்ணு இறந்துவிட்டதால், தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 124 ஆகக் குறைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago