சேலம்: சேலத்தில் பணியிடம் மாறுதலாகிச் செல்லும் பத்திரப்பதிவுத் துறை மண்டல துணைத் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில், ரூ.3.20 லட்சம் ரொக்கம் மற்றும் 34 பவுன் தங்கக் காசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பத்திரப்பதிவுத் துறையில் சேலம் மண்டல கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 70 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பத்திரப்பதிவுத் துறையின் சேலம் மண்டல துணைத் தலைவராக வி.ஆனந்த் என்பவர் பணிபுரிந்து வந்தார். தற்போது, அவர் கடலூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் ஆனந்த் வீட்டில் பிரிவு உபச்சார விழா நடந்தது. இதில், பத்திரப்பதிவு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு, ஆனந்த்துக்கு தங்க ஆபரணங்கள், ரொக்கம் என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்கியதாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், நேற்று காலை 6 மணியளவில் ஆனந்த்தின் வீட்டில் சோதனை நடத்தினர். மாலை வரை நீடித்த சோதனையில் சுமார் ரூ.13 லட்சம் மதிப்புஉள்ள ஒரு பவுன் எடையுள்ள 34 தங்கக் காசுகள், ரொக்கம் ரூ.3.20 லட்சம் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago