ராமேசுவரம் மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை தாக்குதல்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டி அடித்ததால் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் திரும்பினர்.

ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றன. அன்று இரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீ்ன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறியதாகக் கூறி மீனவர்களின் விசைப்படகுகள் மீது கற்களை வீசித் தாக்கினர்.

மேலும் நீண்ட கம்புகளில் பொருத்தப்பட்டிருந்த கத்திகளைக் கொண்டு மீன் வலைகளை வெட்டி விரட்டியடித்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட படகுகளின் மீன்பிடி வலைகள் கடலில் மூழ்கின. இதனால் மீன் பிடிக்க முடியாமல் பல லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்