கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ.115 கோடி

By செய்திப்பிரிவு

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ.115 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தைவிட இது 82 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.63 கோடியாகும்.

அதேபோல, வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.431 கோடியில் இருந்து அதிகரித்து ரூ.449 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி மூலமான வருமானம் அதிகரித்து ரூ.601 கோடியாக உள்ளது. வட்டி அல்லாத பிற இனங்கள் மூலமான வருமானம் ரூ.272 கோடியாகும்.

அரையாண்டில் வங்கியின் லாபம் ரூ.220 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ.136 கோடியாக இருந்தது. வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.1,11,530 கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.3,939 கோடி அதிகரித்துள்ளது.

வங்கி அளித்துள்ள கடன் தொகை ரூ.1,020 கோடி அதிகரித்து ரூ.50,408 கோடியைத் தொட்டுள்ளது. வங்கி திரட்டிய சேமிப்பு ரூ.61,122 கோடியாகும். வங்கியின் வாராக் கடன் ரூ.1,428 கோடியாக உள்ளது. நிகர வாராக் கடன் ரூ.3,998 கோடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்