நவ.3-வது வாரம்மருத்துவக் கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நவம்பர் 3-வது வாரத்தில் கலந்தாய்வைத் தொடங்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதற்கான பணிகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்ததும் தமிழகத்தில் மாநிலஅரசு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்குவது வழக்கம்.அதன்படி, நவம்பர் 3-வது வாரத்தில் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது 7.5 சதவீதஉள்இடஒதுக்கீட்டால் 300-க்கும்மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்