பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் ஒன்று நேற்று வேகமாக மோதி விபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது.
பாம்பன் கடற்கரைப் பகுதியில் நேற்று அதிகாலை பலத்த காற்று வீசியது. அப்போது புதிய ரயில் பாலப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இரும்பு மிதவை மற்றும் அதில் இருந்த கிரேன்களில் ஒன்று காற்றில் வேகமாக நகர்ந்து ரயில் பாலத்தின் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதையடுத்து, சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அதிவிரைவு ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது.
உடனே ரயில்வே பொறியாளர்கள் மற்றும் கட்டுமானப் பொறியாளர்கள் விரைந்து சென்று, பாம்பன் ரயில் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். பின்னர், பாலத்தின் மீது மோதிய கிரேனை படகுகள் மூலம் மீட்டனர். ரயில் பாலத்துக்கு அருகே இருந்த மற்றொரு மிதவை, கிரேனும் அப்புறப்படுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago