தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள், தள்ளுபடி ஜோயாலுக்காஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகளை ஜோயாலுக்காஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:

நகை விற்பனை மட்டுமின்றி கரன்சி பரிமாற்றம், ஃபேஷன், பட்டு, மால்கள் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வரும் ஜோயாலுக்காஸ் குழுமம் உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தங்க நகை வாங்குவோருக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை ஜோயாலுக்காஸ் வழங்குகிறது. அதன்படி, ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் வைரக்கற்கள், வைர நகை வாங்குவோருக்கு 1 கிராம் தங்க நாணயம் இலவசம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தங்க நகை வாங்குவோருக்கு 200 மி.கி. தங்க நாணயம் இலவசம். 1 கிலோ வெள்ளிக்கு ரூ.3,250 தள்ளுபடி வழங்கப்படும். இதுதவிர, எஸ்பிஐ அட்டைக்கு கேஷ்பேக் உள்ளிட்ட பிற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, நகைகளுக்கு ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, ஓராண்டு இலவச காப்பீடு, நகையை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதி ஆகியவையும் உண்டு.

தற்போதைய கரோனா சூழல் கருதி, அனைத்து ஜோயாலுக்காஸ் கிளைகளிலும் முழு பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. நகை வாங்க வருவோருக்கு பாதுகாப்பான, இனிமையான அனுபவத்தை தரவேண்டும் என்பதில் ஜோயாலுக்காஸ் உறுதியாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்