திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில் உட்பட சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.
சிவ பெருமானுக்கு ஒவ்வொரு நட்சத்திரத்திலும், அதற்கு உகந்த பொருட்களை கொண்டு பூஜித்து வழிபடுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திர தினமான நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக, பல நூறு கிலோ அரிசி பயன்படுத்தப்பட்டது. அன்னாபிஷேகம் செய்யப்பட்டதும், மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு, அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சாதம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றபோது கோயில் நடை சாத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago