வேல் யாத்திரைக்கு தடை கேட்கிறது மார்க்சிஸ்ட்

By செய்திப்பிரிவு

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 'வேல் யாத்திரை' என்கிற பெயரில் பாஜககலவரத்துக்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே 'வேல் யாத்திரை' என பெயரிட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் பாஜக நடத்தியிருக்கும் யாத்திரைகளை கவனித்து வருபவர்களுக்கு அவர்களின் நோக்கம் விளங்கும்.

கரோனா காலத்தில் 100பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் வட மூலையில் இருந்து தென் மூலை வரை கட்டுப்பாடுகள் இருக்கும் இந்தக் காலத்தில் யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரச்சாரத்தை பரப்புவதோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவே, நோய்ப் பேரிடர் காலத்தின் கட்டுப்பாடுகளை மீறி, கலவர அரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்