மக்களுக்காக களத்தில் நிற்கும்ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ்: சஞ்சய் தத்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:

பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 31-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தில் நாடு முழுவதும் ‘சத்தியாகிரக’ போராட்டமும், நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரை டிராக்டர் பேரணியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நவம்பர் 5-ம் தேதி தர்ணா போராட்டமும் நடைபெற உள்ளது. மக்களுக்காக களத்தில் நிற்கும் ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ் மட்டும்தான்.

கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘ஆரோக்ய சேது’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த செயலியை பயன்படுத்தி வந்த எனக்கு கரோனா வந்துவிட்டது. இந்த செயலியை அரசாங்கம் உருவாக்கவில்லை எனவும், இதை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி வருபவர்களின் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்