மதுரை: சசிகலாவுக்குத் தண்டனைக் காலம் முடிவடைந்துவிட்டது. அவர் விரைவில் வெளியே வருவார் என திவாகரன் தெரிவித்தார்.
சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச் செயலருமான திவாகரன் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : ஸ்டாலினை பாராட்டியபோது திமுகவில் இணையப்போவதாக கூறினர். அது உண்மையல்ல. நான் எப்போதும் மூன்று கரை வேட்டியை மாற்ற மாட்டேன். நல்லது செய்பவர்களைப் பாராட்டுவதில் தவறில்லை. சசிகலாவுக்குத் தண்டனைக் காலம் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியே வருவார். சசிகலா முதல்வராகப் பதவி ஏற்க வேண்டாம் என வலியுறுத்தினேன். சசிகலாவைச் சுற்றி நிறைய சதிகள் நடந்தன. ஜெயலலிதா இறந்தவுடன் மூன்று பேர் முதல்வராக வேண்டும் என முயன்றார்கள். சசிகலா ஒப்படைத்த வேலையை முதல்வர் பழனிசாமி சிறப்பாக கையாண்டார். சசிகலா குறித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் இதுவரை எந்தக் கருத்தும் சொல்லவில்லை. தினகரனே ஒரு ஸ்லீப்பர் செல்தான். அவருக்கு ஸ்லீப்பர் செல் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago