தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் மட்டும் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல நாமக்கல்லில் அரசு கட்டுமான பணி ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.
சென்னை, கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளில் மட்டும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இதேபோன்று திடீர் சோதனைகள் நடத்தப்படும். வரி ஏய்ப்பு செய்திருப்பதாக உறுதியாக தெரிந்த நிறுவனங்களில் மட்டுமே சோதனைகள் நடத்தப்படுகின்றன. வெளிமாவட்டங்களில் நடக்கும் சோதனைகளுக்கும் சென்னையில் இருந்து முக்கிய நபர்களை அனுப்ப வேண்டி இருப்பதால், சென்னையில் சோதனையில் ஈடுபடுவது காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago