மகாராஷ்டிரா பேரவை தேர்தலில் 10 தொகுதிகளில் விசிக போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில்10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன

அதன்படி, கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் (மும்பை), கன்னட் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. பிவாண்டி, மலேகான், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் இண்டியா கூட்டணியை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்