ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திருச்சி வருகை: 4 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

திருச்சி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்திருச்சிக்கு நேற்று வருகை தந்தார்.

சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்த அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வரவேற்றனர்.

சந்தானம் வித்யாலயா பள்ளியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் மே 14 முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

18-ம் தேதி பெங்களூரு பயணம்: பின்னர், மே 18-ம் தேதி சந்தானம்பள்ளியில் இருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, தனி விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார்.

மோகன் பாகவத் வருகையையொட்டி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், சந்தானம் வித்யாலயா பள்ளி, திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையுடன் இணைந்து, மாநகர காவல் உதவி ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்