செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்குதொடர்ச்சியாக ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாதகமான சூழல் இல்லை: இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று முடியும் வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போதைய சூழலில் இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிப்பதால் எந்த பாதகமான சூழலும் ஏற்பட்டு விடப்போவதில்லை எனக்கூறி, இந்த வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.29-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்