குடியுரிமை சட்டத்தில் மாநில அரசுக்கு பங்கில்லை: புதுவை ஆளுநர் தமிழிசை கருத்து

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குடியுரிமை சட்டம் நாட்டுக்குத் தேவையான ஒன்றாகும். இதன்மூலம் யாருடைய குடியுரிமையும் நீக்கப்படவில்லை. மாறாக, குடியுரிமை சேர்க்கப்பட உள்ளது. மதத்துக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. நாட்டின் பாதுகாப்புக்காகத்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சட்டத்தை தவறாக சித்தரிக்கிறார்கள். இதை பின்பற்றவே மாட்டோம் என்று சில மாநிலங்கள் கூறுகின்றன. இதில் மாநில அரசுக்கு பங்கு எதுமில்லை.

‘மத்திய அரசின் திட்டம்; இது நம் நாட்டின் திட்டம்’ என்று மாநில அரசுகள் இதற்கு ஆதரவு தர வேண்டும். மதத்துக்கு எதிராக இருந்தால், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்வார்களா? பிரதமர் அனைவரையும் இணைத்து செயல்படுகிறார். ஆனால், இதற்கு எதிராக இருப்பவர்கள்தான், பிரிவினை பேசுகிறார்கள். இவ்வாறு ஆளுநர் தமிழிசை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்