அரசு துறை செயலர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசுத் துறை செயலர்கள், மாநகராட்சி ஆணையர்கள், சார் ஆட்சியர்கள் உட்பட 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:

உணவு, கூட்டுறவு துறை செயலர் டி.ஜெகந்நாதன், வணிகவரி துறை ஆணையராகவும், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் அபூர்வா, வேளாண் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த சமயமூர்த்தி, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் கே.கோபால், உணவு, கூட்டுறவு துறை செயலராகவும், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலராகவும், தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் வி.ஷோபனா, எழுதுபொருள், அச்சக துறை ஆணையராகவும், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி கவிதா ராமு, தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணையர்கள் மாற்றம்: அதேபோல, ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்கல்வி துறை துணை செயலராகவும், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜெ.பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராகவும், கடலூர் கூடுதல் ஆட்சியர் எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ண மூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், கோவை மாநகராட்சி ஆணையராகவும், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் தியான்டியோராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநர் மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்களுக்கான இயக்குநராகவும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் எஸ்.பிரியங்கா, தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராகவும், ஓசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யா, கடலூர் கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்